நெய்தல் நகர் பாலர் பாடசாலையில் சிறுவர் சந்தை..!
மூதூர் அந் நுஸ்ரா சமூக அபிவிருத்தி மையத்தினால் நடாத்தப்பட்ட நெய்தல் நகர் பாலர் பாடசாலை மாணவர்களின் சிறுவர் சந்தை நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தெளபீக் அவர்களும் விசேட விருந்தினர்களாக மூதூர் வலயக்கல்வி பணிப்பாளர் ஏ. எல். சிராஜ், மூதூர் பிரதேச செயலகத்தின் உதவி செயலாளர் திருமதி.ரொசானா ஸியா உட்பட அரச அதிகாரிகள், பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் நலன் விரும்பிகள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
No comments