Vettri

Breaking News

டுபாயில் இருந்து அழைத்துவரப்பட்ட குற்றவாளி




 குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் இன்று (29) டுபாயில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட கீத்மால் பெனோய் தொடர்பில் பொலிஸார் அறிக்கை வௌியிட்டுள்ளனர்.

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபராக கருதப்படும் இவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் சிவப்பு எச்சரிக்கை பிறப்பித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் 33 வயதுடைய கித்துல்கடவல கந்த, அகலவத்தை பிரதேசத்தில் வசித்து வருபவர் என தெரியவந்துள்ளது.

கொலை முயற்சி, கடத்தல் மற்றும் ஹெரோயின் வைத்திருந்தமை தொடர்பான பல வழக்குகளுக்காக சந்தேகநபருக்கு எதிராக மத்துகம நீதவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் பாதாள உலகக் குழுத் தலைவரான மத்துகம ஷானின் உதவியாளர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments