Vettri

Breaking News

ஜனாதிபதி தேர்தலுக்காக ஒப்பமிட்ட சஜித்துக்கு அம்பாறையில் பால் சோறு!!!









(வி.ரி.சகாதேவராஜா)

எதிர்வரும் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுவில் கையொப்பமிட்ட மறுகணம் அம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவாக பட்டாசு கொளுத்தி பால் சோறு வழங்கப்பட்டது.

 அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச இணைப்பாளர் வெள்ளையன் வினோகாந்த் தலைமையில் புதிய வளத்தாப்பிட்டி பிரதேசத்தில் இந்த நிகழ்வு இடம் பெற்றது.

மாவட்ட அமைப்பாளர் சந்திரதாச கலப்பதியும் கலந்து சிறப்பித்தார்.

 முதலில் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடு இடம் பெற்றது .பின்பு பட்டாசு கொளுத்தி பால் சோறு வழங்கப்பட்டது. கூடியிருந்தவர்களுக்கும் மற்றும் வீதியால் சென்றவர்களுக்கும் இந்த பால் சோறு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இணைப்பாளர் வினோகாந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்...

நிச்சயம் சஜித் பிரேமதாச அவர்களை எதிர்கால ஜனாதிபதி ஆக்குவதற்கான முழு முயற்சிகளில் நாட்டுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர் .

அவர்களை கட்டாயம் ஜனாதிபதி ஆசனத்தில் அமர வைப்பது  உறுதி என்ற தீர்மானத்துடன் பலரும் உள்ளனர்.

திரு. சஜித் பிரேமதாஸ  ஜனாதிபதியாக வரும் பட்சத்தில் இந்நாட்டின் வாழக்கூடிய ஏழைகளுக்கான நல்லாட்சி, மற்றும் சமகாலத்தில் காணப்படக்கூடிய நடைமுறை சிக்கல்கள், நாட்டில் காணப்படக்கூடிய பிரச்சனைகளுக்கான நிரந்தர தீர்வுகள், கல்வி அபிவிருத்தி, சுகாதார அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில் புரட்சி, சுயதொழில் முயற்சியால்களை ஊக்குவித்தல், நவீன விவசாய முறைகள், மீனவர்களுக்கான நலத்திட்டங்கள், பொருட்களின் விலை குறைப்பு, இன்னும் அதிக அபிவிருத்திகள் நாட்டில் உருவாகும் இதற்கு நிச்சயம் சஜித் பிரேமதாஸ அவர்கள் ஜனாதிபதியாக வர வேண்டும் . அவர் தான் வரவேண்டும். நிச்சயமாக அவர் வருவார். என்றார்.

No comments