மட்டக்களப்பு,பட்டிருப்பில் தேசிய படையணியினரின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி
(அஸ்ஹர் இப்றாஹிம்)
தேசிய பொலிஸ் மாணவர் கடேற் படையணியினரின் ஏற்பாட்டில் தலைமைத்துவ பயிற்சி செயலமர்வொன்று பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) களுவாஞ்சிகுடியில் அண்மையில் (28) இடம்பெற்றது.
சவால்களுக்கு முகம்கொடுக்கக்
கூடிய வகையில் எதிர்கால மாணவ
சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்
பயிற்சி மற்றும் உயர் கல்விக்குரிய பொலிஸ் மாணவ படையணி
சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர்
சஞ்ஜீவ மெதவக்க
அவர்களது வழிகாட்டலிலும் ,பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸ் மாணவ படையணி
எஸ்.எம்.வை. செனிவரெத்தின
அவர்களது நெறிப்படுத்தலிலும்
மேற்கொள்ளப்பட்டது.
இப்பயிற்சி நெறியில் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் செட்டிபாளையம் மகா வித்தியாலயம்,தேற்றாத்தீவு
மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளைச் சேர்ந்த 200
மாணவர்கள் இச்செயற்பாடுகளில்
கலந்துகொண்டு சான்றிதழ்களைப்
பெற்றுக்கொண்டார்கள்.
இலங்கை பொலிஸ் மாணவ படையணியின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் திரு.சிந்தக்க குணரத்ன அவர்கள் தலைமையிலும் நேரடியான கண்காணிப்பிலும் இந் நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நிகழ்வுகளுக்கு இலங்கை பொலிஸ் மாணவ படையணியின் பணிப்பாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிந்தக்க குணரத்ன பிரதம அதிதியாகவும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அமல் ஏ எதிரிமான , களுவாஞ்சிகுடி பிரதேச உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஜனக ஜயரத்ன ,களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் அபேயவிக்கிரம ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வில் பாடசாலைகளின் அதிபர்கள் எம்.சபேஸ்குமார் ரீ.அருள்ராசா ரீ.தேவராஜன் ,தேசிய பொலிஸ் மாணவ படையணி விரிவுரையாளர்கள் , தேசிய மாணவர் படையணியின் பொறுப்பாசிரியர்கள், தேசிய பொலிஸ் மாணவ சிப்பாய் படையணி பயிற்றுவிப்பாளர்கள், பெற்றோர்கள் ,நலன்விரும்பிகள் என பலரும் கலந்துகொண்டனர்.
No comments