Vettri

Breaking News

தம்பிலுவில் மகா வித்தியாலயத்தில் அகில இலங்கை தமிழ் மொழித்தின விழா..






இன்றைய தினம் மாகாண மட்ட தமிழ் மொழி தினம்  திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில்  (15)இன்று இடம் பெற்றது.

 கல்முனை கல்வி மாவட்ட நாண்கு  வலயங்களில் உள்ள பாடசாலையில் வலய மட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் இப் போட்டியில் பங்கு பற்றுகின்றனர். 

 இன் நிகழ்வில் ஆன்மிக அதிதிகள், அம்பாரை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்,திரு. எஸ்.ஜெயராஜன் கலாநிதி கரி கோல்சன் மற்றும்  M. N. R. லாசன் அவர்களும். திருக்கோவில், சம்மாந்துறை,கல்முனை, அக்கறைப்பற்று பிரதேசங்களின் உள்ள   வலயக்கல்விப்  பணிப்பாளர்கள், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள்,திருக்கோவில் கல்வி வலயத்தின் உத்தியோகதர்கள்,பாடசாலையின் அதிபர்கள்,வளவாலர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்  என பலரும் கலந்து கொண்டனர்.

இன் நிகழ்வானது காலை 8 மணிக்கு தமிழ் மொழி தின பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற்று அதிதிகள் மலர் மாலை அணிவித்து     திருக்கோவில் பிரதான வீதி மணிக்குட்டு  கோபுரத்தில் இருந்து தம்பிழுவில் மகா வித்தியாலயம் வரை மணாவர்களின் கலை நிகழ்வுடன் வரவேற்றிருந்தனர்.











No comments