Vettri

Breaking News

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!!




 கனமழை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் இது குறித்து அவதானத்துடன் இருக்குமாறு திணைக்களம் அறிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் குறித்த பகுதிகளில் 100 மி.மீ க்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அனர்த்தங்களை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

இலங்கையை அண்மித்துள்ள தாழ்வான வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, நாட்டின் தென்மேல் பகுதிகளில் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.


No comments