கிளப் வசந்த கொலை: மேலும் இருவர் கைது!!
அத்துருகிரியவில் கிளப் வசந்த உள்ளிட்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாணந்துறை பின்வத்த பிரதேசத்தில் வைத்து பாணந்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.கைதானவர்களில் ஒருவர் 32 வயதான, காலி நாகொட பகுதியைச் சேர்ந்தவர். அவர் துப்பாகிச் சூட்டை நடத்தியவர் எனவும் மற்றவர் 29 வயதான அஹுங்கல பகுதியைச் சேர்ந்தவர் எனவும் அவர், குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்காக வாகன சாரதியாக செயற்பட்டவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது
No comments