Vettri

Breaking News

மீனவர்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம்!!




 வடக்கு வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்திற்கு செல்வதை எதிர்வரும் 2 நாட்களுக்கு தவிர்க்குமாறு மீனவர்கள் மற்றும் கடல்சார் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பலத்த மழை, கடும் காற்று மற்றும் கடல் சீற்றம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

அதற்கமைய இன்று வங்காள விரிகுடாவை அண்மித்த வளிமண்டலத்தில் காற்றழுத்த தாழ்வுநிலை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த கடற்பிராந்தியத்தில் பலத்த மழை பெய்வதுடன், மணித்தியாலத்திற்கு 70 முதல் 80 கிலோமீட்டர் வரையான கடும் காற்று வீசக்கூடுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படுமென வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் இன்றும் நாளையும் வடக்கு வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதிக்கு செல்வதைத் தவிர்க்குமாறு திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. (

No comments