Vettri

Breaking News

மட்டக்களப்பு பழுகாமத்தில் பாலத்தில் இருந்து மோட்டார் சைக்கிளுடன் தவறி வீழ்ந்து ஒருவர் உயிரிழப்பு






(அஸ்ஹர் இப்றாஹிம்)

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குபட்ட பழுகாமம் பெரியபோரதீவு பிரதான வீதியில் உள்ள ஆத்துக்கட்டு பாலத்தின் ஊடாக  மோட்டார் சைக்கில் ஒன்றில் பிரயாணித்த 3 பேரில் மோட்டார் சைக்கிளை  செலுத்தியவர் மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இச் சம்பவம்  ஞாயிற்றுக்கிழமை பகல் 11 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். 

பழுகாமம் பட்டாரபுரத்தைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டுபிள்ளைகளின் தந்தையான ஈஸ்வரன் தியாகராஜா என்பவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.

குறித்த நபர் நண்பர்கள் இருவருடன்  ஸ்கூட்டி   ரக மோட்டார் சைக்கிளில் ஒன்றில் சம்பவதினமான பகல் 11 மணியளவில் பழுகாமத்தில் இருந்து பெரிய போரதீவு பிரதேசத்தை நோக்கி பிரயாணித்து கொண்டிருந்த போது  ஆத்துக்கட்டு பாலத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்த முற்பட்டபோது குறித்த நபர் தவறி  மோட்டார் சைக்கிளுடன் பாலத்தில் இருந்து கீழே தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார் 

இதைனையடுத்து பொலிசார் பொதுமக்கள் உதவியுடன் நீரிழ் மூழ்கி உயிரிழந்தவரையும் மோட்டர் சைக்கிளையும் மீட்டுள்ளனர்.

இது தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

No comments