ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைய நிறுத்தப்பட்ட இல்மனைட் அகழ்வு!!!
( வி.ரி. சகாதேவராஜா)
ஜனாதிபதியின் அறிவிப்புக்கு அமைய திருக்கோவிலில் இல்மனைட் அகழ்வு பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்பினையும் மீறி நேற்று முன்தினம் புதன்கிழமை "தம்சிலா" நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட இல்மனைட் அகழ்வு ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய நிறுத்தப்பட்டு குறித்த நிறுவனத்தின் ஊழியர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதற்கான முழு நடவடிக்கைகளையும் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன் மற்றும் .த.கலையரசன் மற்றும் அ.நிதான்சன் இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிப முன்னணி துணைச்செயலாளர் ஆகியோர் முயற்சியை மேற்கொண்டு இருந்தனர்
ன
இதில் கலந்து கொண்ட அ.நிதான்சன் தெரிவிக்கையில்
இந்த இடை நிறுத்தம் நிரந்தமானதாக ஆக்கப்பட தொடர்ச்சியாக வலியுறுத்துவோம் அரசுகள் மாறும்போது அமைச்சுக்கள் மாறும்போது முயற்சி இடம்பெற்ற வண்ணமே உள்ளன. இதனால் மக்கள் தொடர்ச்சியான அசௌகரியத்துக்கு உள்ளாகின்றனர் கடல் வளத்தை பாதுகாக்காது இன்று வேறு நாட்டுக்கு விற்கும் நிலை மாற வேண்டும் ஏலவே பெறப்பட்ட சுற்றாடல் அறிக்கையில்(EIA Report ) பாதிப்புக்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டதாக அறிகின்றோம்.ஆகவே அவ்வாறான பாதிப்பு மக்களை பாதிக்காதவாறு நாம் மக்களுடன் தொடர்ந்து இருப்போம் எனத் தெரிவித்தார்
No comments