மக்கள் இல்லா பிரச்சாரக் கூட்டங்களில் சரத் பொன்சேகா !!
ஒரு காலத்தில் யுத்த வெற்றிவீரனாக சிங்கள மக்களால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடப்பட்ட சரத் பொன்சேகாவை(sarath fonseka) இன்று அந்த மக்களே வெறுத்து ஒதுக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ச(gotabaya rajapaksa) ஜனாதிபதியாகி பின்னர் மக்களின் எதிர்ப்பால் அந்த பதவியை தூக்கி எறிந்து விட்டு தப்பி ஓடினாரோ அதே நிலைதான் இன்று சரத் பொன்சேகாவிற்கும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக இருந்த அவர் தனக்கு ஜனாதிபதி வேட்பாளர் பதவி தரவில்லை எனத் தெரிவித்து சுயேட்சையாக களமிறங்கினார்.சென்ற இடமெல்லாம் தன்னை சிங்கள மக்கள் தூக்கி வைத்து கொண்டாடுவார்கள் என கனவு கண்ட அவருக்கு மிஞ்சியது ஏமாற்றம்தான்.
விளைவு சென்ற இடமெல்லாம் வெறும் கதிரைகளுக்கு முன்னால் உரையாற்றவேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு.
முன்னார் இரண்டு கூட்டங்களை ஒழுங்கு செய்தார்.இரண்டிலும் மக்கள் வரவில்லை. மூன்றாவதாக அளுத்கமவிலும் கூட்டம். அங்கும் மக்கள் வரவில்ல
இன்று வியாழக்கிழமை ( 29 ) பிற்பகல் அளுத்கம பேருந்து நிலையத்தில் பொது கூட்டமொன்றை ஏற்பாடு செய்திருந்தார் .
இதில் , சரத் பொன்சேகா உரையாற்றிக் கொண்டிருந்த போது தேரர் ஒருவர் உட்பட சில பேச்சாளர்கள் மேடையில் இருந்ததாகவும் பொது மக்கள் எவரும் இதில் கலந்துகொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
No comments