Vettri

Breaking News

இராஜாங்க அமைச்சர் சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு பத்தாயிரம் பனம் விதைகள் நடும் திட்டம் ஆரம்பித்து வைப்பு!





கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி " பத்தாயிரம் பனம் விதைகள் நடும் திட்டத்தின் "  கீழ்  காரைதீவில் பனம் விதைகள் நடும் செயற்திட்டம் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

சிவ. சந்திரகாந்தன் அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு கட்சி தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்களால் பல்வேறு சமூக சேவை செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அத்தோடு நேற்றைய தினம் ஆயிரம் பயன்தரு மரங்கள் நடும் திட்டமானது மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பத்தாயிரம் பனம் விதைகள் நடும் செயற்திட்டமானது அம்பாறை காரைதீவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.              

கட்சியின் காரைதீவு கிராமிய குழு நிர்வாகிகளின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதேச மற்றும் கிராமிய குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.






No comments