காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் மாற்றுப் பராமரிப்பு குடும்ப வலுவூட்டல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவிகள்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
காரைதீவு பிரதேச செயலாளர் திருமதி ராகுலநாயகி சஜிந்ரன் அவர்களின் வழிகாட்டலில் காரைதீவு பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டன.
சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஒழுங்கமைப்பில்
உதவி பிரதேச செயலாளர் திரு.எஸ்.பார்த்தீபன் தலைமையில் யுனிசெப் மற்றும் செரி நிறுவனத்தின்"மாற்றுப் பராமரிப்பு குடும்ப வலுப்படுத்தல்" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் வாழ்வாதார உதவி மற்றும் கற்றல் உபகரணங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டி தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.
No comments