இந்திய இலங்கை படகுச் சேவை ஆரம்பித்து வைப்பு!!
இந்திய இலங்கை படகுச் சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் இன்று மாலை காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
இந்தியா நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று வெற்றிகரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
41 பயணிகளுடன் குறித்த கப்பல் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.
வந்தடைந்த படகையும் பயணிகளையும் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதர் உள்ளிட்ட குழுவினர் வரவேற்றனர்.
சிவகங்கை என்ற பெயரில் புதிய பயணிகள் கப்பல், நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து காலை புறப்பட்டு, காங்கேசன்துறைக்கு பிற்பகல் வந்தடைந்தது.
தொடர்ந்து கப்பல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டு நாளை காலை புறப்பட்டு பிற்பகல் நாகப்பட்டினம் துறைமுகத்தை சென்றடையவுள்ளது.
இக் கப்பல் சேவை 18ஆம் திகதியிலிருந்து நாள்தோறும் நாகப்பட்டினத்திலிருந்து காலை 8 மணிக்கும், காங்கேசன்துறையிலிருந்து பிற்பகல் 2 மணிக்கும் இயக்கப்படும்.
No comments