கல்முனையில் பெண் சுய தொழில் முயற்சியாண்மை திட்டம்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேசனினால்
"பொருளாதார ரீதியாக வலுப்படுத்தப்பட்ட பெண் சமூகத்தை உருவாக்குவோம்" எனும் தொனிப்பொருளில் கல்முனை, சாய்ந்தமருது ,நாவிதன்வெளி ,காரைதீவு மற்றும் நிந்தவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேசங்களில் பெண் மேம்பாட்டு திட்டம் ஒன்றை ஏ.ஆர்.மன்சூர் பௌண்டேஷயின் தலைவி சட்டத்தரணி மர்யம் மன்சூர் நளிமுதீன் அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அதன் ஒரு அங்கமான பெண் சுயதொழில் முயற்சியாண்மை எனும் மாபெரும் பெண்கள் நலன் உதவித்திட்டத்தின் கல்முனைக்கான நிகழ்வானது கல்முனை இக்பால் சன சமூக நிலையத்தில்(25) நடைபெற்றது.
பெண்களின் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்து பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தி, அதற்கான வளங்களை அமைத்துக் கொடுத்து, பெண்களின் நலன்புரி, சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்பு போன்ற விடயங்களில் கவனம் செலுத்தி அனைத்து வசதிகளையும் செய்து கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.
இதன் போது பெண்களுடன் நேரடியாக கலந்துரையாடி அவர்கள் எதிர்நோக்கும் சவால்களும் அதற்கான தீர்வுகளை வழங்குவதற்காக பெண் சுயதொழில் முயற்சியான்மை செய்த்திட்டத்தின் விண்ணப்பபடிவங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
No comments