சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய மாணவர்கள் ஆங்கில தின நாடகப் போட்டியில் முதலிடம்
கல்முனை கல்வி மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான ஆங்கில தின மற்றும் நாடகப் போட்டியில் சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட சம்மாந்துறை செந்நெல் ஸாஹிரா மகா வித்தியாலய ஆரம்ப பிரிவு மாணவர்கள் ஆங்கில நாடகப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளனர்.
பாடசாலை அதிபர் யூ.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்ற வெற்றியீட்டிய மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வில் ஆசிரியர்கள்,மாணவர்கள் மற்றும் இம் மாணவர்களை பயிற்றுவித்த ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
No comments