Vettri

Breaking News

தமிழ்மக்கள் மீது பாரிய இனப்படுகொலையை அரங்கேற்றியது ஜே.வி.பி!!




 தமிழ் மக்கள் மீது பாரிய இனப்படுகொலையொன்றை அரங்கேற்றுவதற்கு தென்பகுதி சிங்கள இளைஞர்களை இனவெறி ஊட்டி அவர்களை தயார்படுத்தி இராணுவத்திற்கு சேர்த்து கொடுத்தவர்கள் ஜே.வி.பியினர் என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் (S. Kajendran) தெரிவித்துள்ளார்.


யாழில் நேற்றையதினம் (28.08.2024) ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சிங்கள இராணுவத்தினரை எந்த ஒரு சிங்கள கட்சியும் தண்டிக்கப் போவதில்லை. ஆகவே தான் நாங்கள் உள்ளக விசாரணைகளை தவிர்த்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விசாரணையை வலியுறுத்துகிறோம

தமிழர்களுக்கான ஒடுக்கு முறைகைளை ஜே.வி.பியினர் முன்னெடுக்க வேண்டுமானால் அதிகார துஷ்பிரயோகங்களை செய்பவர்களை தனது கைக்குள் வைத்திருந்தால் தான் தமிழர்களையும், தமிழ்தேசியத்தையும் நீக்க முடியும்.

“தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் ஒரு கட்டத்தில் இலங்கை இராணுவம் வலுவிழந்திருந்தது.

இலங்கை இராணுவத்தினரின் எண்ணிக்கையும் குறைவடைந்திருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளும் பேச்சுவார்த்தை மூலமான தீர்வுக்கு தயாராக இருந்தனர்.

No comments