கிழக்கு மாகாண மட்ட தமிழ் மொழித்தின போட்டியின் முதலாம் பிரிவு வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி கௌரவிப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கிழக்கு மாகாண மட்ட தமிழ்மொழித் தின போட்டிகள் அண்மையில் கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையில் இடம்பெற்றபோது சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் வித்தியாலய தரம் 5 மாணவி கே.எப்.நிஸ்கா முதலாம் பிரிவு வாசிப்பு போட்டியில் வெற்றி பெற்று தேசிய மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
போட்டியில் வெற்றி பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்த மாணவிக்கு அதிபர் எம்.ஐ.சம்சுதீன் தலைமையிலான கல்வி சமூகம் அண்மையில்பாராட்டி கெளரவித்தது.
No comments