ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெற்றிக்காக மாளிகைக்காட்டில் இணைப்பாளர்களின் கலந்துரையாடல்
(அஸ்ஹர் இப்றாஹிம்)
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் அவர்களின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர்களின் கூட்டம் மாளிகைக்காடு தலைமைக் காரியாலயத்தில் மாளிகைக்காடு பிரதேச அமைப்பாளரும், முன்னாள் காரைதீவு பிரதேச சபையின் உதவி தவிசாளருமான ஏ.எம்.ஜாஹிர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்க அவர்களை ஆதரித்து அவரின் வெற்றிக்கான பங்காளிகளாக மாறுவதற்கான யுக்திகளை கையாள்வது சம்பந்தமாகவும், அம்பாறை மாவட்டத்தின் முஸ்லிம், தமிழ் பிரதேசங்களில் தேர்தல் பிரச்சாரங்களை தொடர்ந்து மேற்கொள்வது சம்பந்தமாகவும் இதன் போது விரிவாக ஆராயப்பட்டது.
No comments