மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது முறையா?யோகநாயகன் கேள்வி!!
( வி.ரி.சகாதேவராஜா)
சமகாலத்தில் மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுகின்றனர் . இது முறையா என்ற கேள்வி எழுகின்றது. சுவாமி விவேகானந்தர் கூறியது போன்று எம்மிடம் இருக்கின்ற ஆற்றல்களை திறமைகளை ஆசிரியர்கள் வெளிக் கொணர வேண்டும்.அதனை அழகேஸ்வரி ஆசிரியை நடைமுறையில் காட்டியுள்ளார்.அவரை அன்னமலை சார்பில் மனமார வாழ்த்துகிறோம்.
இவ்வாறு சம்மாந்துறை வலயத்துக்கு உட்பட்ட அன்னமலை ஸ்ரீ சக்தி வித்தியாலயத்தில் நடைபெற்ற ஆசிரியை திருமதி அழகேஸ்வரி யோகராஜாவுக்கான சேவை நலன் பாராட்டு விழாவில் உரையாற்றிய நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும் அன்னமலை வடபத்ரகாளிஅம்பாள் ஆலய நிருவாகியுமான திருமேனி யோகநாயகன் பேசுகையில் குறிப்பிட்டார்.
அன்னமலை ஸ்ரீ சக்தி வித்யாலயத்தில் கற்பித்து ஓய்வுபெறும் ஆசிரியை திருமதி அழகேஸ்வரி யோகராஜாவுக்கான சேவை நலன் பாராட்டு விழா நேற்றுமுன்தினம் வித்தியாலய அதிபர் பொன். பாரதிதாசன் தலைமையில் நடைபெற்றது.
விழாவில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவி கல்வி பணிப்பாளர் வீ.ரீ. சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.
நிகழ்வில் ஆசிரியையின் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர்.
சமூக ஆர்வலர்களும் பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டார்கள்.
விழாவில் பிரதம அதிதி கூறியதாவது ..
இப் பாடசாலை அதிபர் பொன்.பாரதிதாசன் இந்த சமூகத்தை உள்வாங்கி இருக்கின்றார். இதுதான் அவரது வெற்றி .
ஆசிரியை திருமதி அழகேஸ்வரி 32 வருட காலம் கல்விச் சேவை ஆற்றியுள்ளார். குறிப்பாக ஆரம்பக் கல்வி ஆசிரியையாக சீரிய பணியாற்றினார். அவர் ஓய்வு பெறுவது இம் மாணவர்களுக்கு ஒரு பேரிழப்பாக கருதலாம்.
என்றார்.
சிரேஸ்ட ஆசிரியை திருமதி அற்புதராஜா நெகிழ்ச்சியாக உரையாற்றினார்.
பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் பெற்றோர்களால் ஓய்வு பெற்ற ஆசிரியை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார். பரிசுகளும் வழங்கப்பட்டன.
மதிப்பெண்களை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது முறையா?யோகநாயகன் கேள்வி!!
Reviewed by Thanoshan
on
8/19/2024 10:25:00 AM
Rating: 5
No comments