இந்திய பாதுகாப்பு ஆலோசகர் இலங்கைக்கு திடீர் விஜயம்!!
இந்தியத் (India) தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் (Ajith Doval) இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
முன்னறிவிப்பில்லாத வகையில் இன்று (29) குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது
இந்த விஜயத்தின் போது அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கி இருந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) உள்ளிட்ட பலரைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பாதுகாப்பு மாநாட்டு நடவடிக்கையின் தொடர்ச்சியாக இந்த விஜயம் அமைந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments