கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்களுக்கு புதிய அடையாள அட்டை!!!
( வி.ரி.சகாதேவராஜா)
சம்மாந்துறை வலயக்கல்விக் காரியாலய கல்வி சார்ந்த உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் புதிய அடையாள அட்டை வழங்கப்பட்டிருக்கிறது.
இந்த அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார் தலைமையில் நேற்று பணிமனையில் நடைபெற்றது.
கல்வி உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் இப் புதிய அடையாள அட்டை அணிவிக்கப்பட்டு அது கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதி கல்வி பணிப்பாளர்கள் உதவி கல்வி பணிப்பாளர்கள் ஆசிரிய ஆலோசகர்கள் வளவாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
No comments