வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் யானையின் சடலம் கண்டெடுப்பு!!
குருணாகல் (Kurunegala) - நிகவெரட்டிய (Nikaweratiya), கந்தேகெதர பிரதேசத்தில் துண்டு துண்டாக வெட்டி தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் காட்டு யானையின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகவெரட்டிய கொடு அத்தவல காப்புப் பகுதியில் வீடொன்றிற்கு அருகில் சுற்றித் திரிந்த காட்டு யானையொன்று மின்சார கம்பிகளினால் கொல்லப்பட்டுள்ளதாகவும் பின்னர் துண்டு துண்டாக வெட்டி எரித்துவிட்டு எஞ்சிய பாகங்களை புதைத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரதேசவாசிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நிகவெரட்டிய காவல்துறையினர் மற்றும் வனஜீவராசிகள் தள காரியாலய அதிகாரிகள் உரிய இடத்தை ஆய்வு செய்த போது இந்த காட்டு யானையின் உடற்பாகங்களை கண்டெடுத்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் குறித்த காணியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் நிகவெரட்டிய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments