Vettri

Breaking News

வரலாற்றில் முதல் தடவையாக மடத்தடி மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூரம்!!!





( வி.ரி. சகாதேவராஜா)

வரலாற்றில் முதல் தடவையாக நிந்தவூர் மாட்டுப்பளை மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலயத்தில் ஆடிப்பூர திருவிழா நாளை( 7) புதன்கிழமை சிறப்பாக நடைபெற இருக்கின்றது .

ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ சண்முக மகேஸ்வரக் குருக்கள் முன்னிலையில் ஆலய குரு சிவ ஸ்ரீ ச.கோவர்த்தன சர்மா தலைமையில்  ஆடிப்பூரத் திருவிழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது .

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக ஆலய பரிவான சபை தலைவர் கலாநிதி கே.ஜெயசிறில்  தெரிவித்தார் .

இதேவேளை நாளை மறுதினம் (8) வியாழக்கிழமை நாக சதுர்த்தி விசேட பூஜையும் அங்கு இடம் பெற இருக்கின்றது.

அத் தருணம் கொக்கு மந்தாரை நீல காக்கணம்பூ பால் போன்ற நைவேத்தியங்களை கொண்டு வருமாறு பக்தர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கின்றார்கள் என்று ஆலய பரிபாலன சபையின் செயலாளர் த.சண்முகநாதன் தெரிவித்தார்.

No comments