போதைவஸ்து பாவனையிலுள்ளவர்ளுக்கு சிகிச்சையளித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வு
அஸ்ஹர் இப்றாஹிம்)
போதைவஸ்து பாவனையிலுள்ள நபர்களை நிர்வகிப்பதற்கான வழிகாட்டுதல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான பயிற்சி செயலமர்வொன்று(28) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
சுகாதார அமைச்சின் உளநல பணியகத்தின் பணிப்புரைக்கமைவாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் பிராந்திய உளநல பிரிவு குறித்த பயிற்சி செயலமர்வினை ஒழுங்கு செய்திருந்தது.
பிராந்திய பிரிவுத் தலைவர்கள், கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட 40 பேர் இந்த பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டனர்.
இதன்போது கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி டொக்டர் திருமதி சகீலா இஸ்ஸடீன், வைத்திய நிபுணர் டொக்டர் ஏ.ஜீ.எம்.ஜூரைஜ், பிராந்திய உளநல பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஜே.நௌபல் ஆகியோர் கலந்துகொண்டு விரிவுரையாற்றினார்கள்.
(
No comments