Vettri

Breaking News

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது தொடர்பான விபரம்!!




 எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வாக்குளிக்கும் முறை தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அதில், மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடுகின்றமையினால் ஒரு வேட்பாளருக்கு வாக்கையும், வேறு இரண்டு வேட்பாளர்களுக்கு இரண்டாவது விருப்புத் தெரிவையும் மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவையும் வாக்குச்சீட்டில் அடையாளமிடுவதற்கான சாத்தியப்பாடு காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசியமெனில் தனக்கான வாக்கை மாத்திரம் அடையாளமிடுவதற்கும் சாத்தியம் காணப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது

தொடர்ந்தும் குறித்த அறிக்கையில், “வாக்காளர் வாக்குச்சீட்டில் தனக்கு விருப்பமான வேட்பாளரின் பெயர் மற்றும் சின்னத்திற்கு எதிரில் அதற்கென குறித்தொதுக்கப்பட்டுள்ள பகுதியில் 1 என்ற இலக்கத்தைக் குறித்து வாக்கைப் பிரயோகித்தல் வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பது எப்படி! முழுமையான விபரம் உள்ளே... | How To Vote In The Presidential Election Sri Lanka

அதன் பின்னர் 2 மற்றும் 3 என்ற இலக்கங்களைக் குறிப்பதன் மூலம் தனது இரண்டாவது மற்றும் மூன்றாவது விருப்புத் தெரிவைக் குறிப்பிட முடியும்.

வாக்குச்சீட்டொன்றில் வாக்காளர் தனது இரண்டாவது அல்லது மூன்றாவது விருப்புத் தெரிவுகளை அடையாளமிட வில்லையெனினும் அதில் முறையானவாறு ஒரு வேட்பாளருக்கு அடையாளமிடப்பட்ட வாக்கொன்று காணப்படின் அது செல்லுப்படியான வாக்கொன்றாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேற்படி முறைகள் தவிர வாக்காளரின் வாக்களிக்கும் உளக்கருத்து வாக்குச்சீட்டின் மீது இடப்பட்ட ஏதேனும் அடையாளமொன்றினால் தெளிவாகத் தெரிகின்றவிடத்து (உதாரணமாக X மாத்திரம் அடையாளமிடப்பட்டுள்ள போது) அதனை வாக்காளருக்கு அளிக்கப்பட்ட வாக்கொன்றாகக் கருதப்படும்.

மேலதிக விபரங்கள் கீழுள்ள அறிக்கையில்


Gallery

No comments