அம்பாறை மாவட்டத்தில் வயலில் காணப்படும் வைக்கோலை எரிப்பதில் இருந்து தவிர்ந்து கொள்ளுமாறு விவசாயிகளுக்கு விவசாய அதிகாரிகள் ஆலோசனை
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறை மாவட்டத்தில சிறுபோக அறுவடை நிறைவு பெற்ற நிலையில் வயலில் காணப்படும் வைக்கோலை தீயிட்டு எரிக்க வேண்டாம் என விவசாய திணைக்கள அதிகாரிகள் விவசாய விரிவாக்கல் பிரிவினர் ஊடாக விவசாயிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
வயதிலிலுள்ள வைக்கோல் மாடுகளுக்கு உணவாக பயப்படுத்துவதற்காக சிலர் வீடுகளில் சேமித்து வைக்கின்றனர். இதனை தவிர அதிகமான விவசாய நிலங்களில் வைக்கோல் தற்போது தீயிட்டு எரிக்கப்பட்டு வருகின்றது.
இதனால் விவசாய நிலத்தில் காணப்படும் பயிர் வளர்ச்சிக்கு பயன்தரும் நுண்ணுயிர்கள் அழிக்கப்படுகின்றன.
இவற்றை வயலிலேயே இறக்க விட்டு நீர் கட்டி வயலை உழும் போது வயலின் போசணை வளம் பல மடங்கு அதிகரித்து நெற்பயிர்கள் நன்றாக செழிப்பாக வளரும்.
எனவே விவசாயிகளுக்கு சேதனைப்பசளையாக மாறக்கூடிய வைக்கோலை எரிப்பதனை தவிர்த்துக் கொள்ளுமாறு விவசாய போதனாசிரியர்கள் விவசாய அமைப்புகளுக்கும், விவசாயிகளுக்கும் துண்டுப் பிரசுரங்கள் மூலம் அறிவுறுத்தல் வழங்கி வருகின்றனர்.
No comments