Vettri

Breaking News

மனிதனுக்கு செயற்கை இருதயம் பொருத்தி சாதனை படைத்த வைத்தியர்கள்!!!




 இருதய நோயாளிகளுக்கு செயற்கை இருதய மாற்று அறுவை சிகிச்சையில் டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் (Texas Heart Institute) விஞ்ஞானிகள் மருத்துவ உலகில் புதிய சாதனை படைத்துள்ளனர்.


டைட்டானியம் கட்டமைக்கப்பட்ட’ இருதயத்தை பயன்படுத்தி உள் வைப்பை மேற்கொண்டு மனிதனுக்கு பொருத்தியுள்ளனர்.

மருத்துவ உலகின் மிகப் பெரிய சாதனையாக இதனை செய்துள்ளனர். அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தால் (Food and Drug Administration) மேற்பார்வையிடப்பட்ட ஆரம்ப சாத்தியக்கூறு ஆய்வின் ஒரு பகுதியாக இந்த அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது.

இருதயம் டைட்டானியத்தால் கட்டமைக்கப்பட்ட பைவென்ட்ரிகுலர் ரோட்டரி இரத்த பம்ப் ஆகும். இது ஒற்றை நகரும் பகுதியை கொண்டது. இது இரத்தத்தை பம்ப் செய்யும் மற்றும் செயலிழக்கும் இதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களையும் மாற்றும் ஒரு காந்த சுழலியை கொண்டுள்ளது. புதிய செயற்கை இருதயம் படைத்து டெக்சாஸ் ஹார்ட் இன்ஸ்டிடியூட் சாதனை இந்த புதிய செயற்கை இருதயம் பிவாகோர் நிறுவனத்தின் பெய்லர் என்ற அறுவை சிகிச்சை நிபுணர்களால் பொருத்தப்பட்டது.

அப்போது அவருக்கு முழுக்க முழுக்க செயற்கையான மாக்லேவ் இருதயம் பொருத்தப்பட்டது. இது போல செயற்கை இருதயம் பொருத்தப்பட்ட முதல் நோயாளி இவரே ஆவார். இந்த செயற்கை இருதயம் ‘கடுமையான பிவென்ட்ரிகுலர் இருதய செயலிழப்பு அல்லது யூனிவென்ட்ரிகுலர் இருதய செயலிழப்புள்ள நோயாளிகளுக்கு இடது வென்ட்ரிகுலர் அசிஸ்ட் டிவைஸ் சப்போர்ட் பரிந்துரைக்கப்படாத நிலையில்’ செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பெய்லரால் தயாரிக்கப்பட்ட டைட்டானியம் செயற்கை இருதயம், (TAH) – 1.4m2 உடல் பரப்பளவை கொண்டுள்ளதாக பிவாகோர் இணையத்தளம் அறிவித்துள்ளது.

இது ‘பெரும்பாலான ஆண்களுக்கும் பெண்களுக்கும்’ ஏற்றது மற்றும் வயதான ஆணுக்கு உடற்பயிற்சி செய்யும் போது போதுமான இருதய வெளியீட்டை வழங்கும் திறன் கொண்டது என்றும் அந்த இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படையில் இந்த சாதனம்,இருதயம் செயலிழந்தவர்களின் இருதயத்தின் இரண்டு வென்ட்ரிக்கிள்களையும் மாற்றுகிறது.

No comments