அம்பாறையிலிருந்து ஹப்புத்தளைக்கு அரிசி மூடைகள் ஏற்றிச் சென்ற கனரக லொறி வெலிமடையில் விபத்து!!!
(அஸ்ஹர் இப்றாஹிம்)
அம்பாறையிலிருந்து கனரக லொறியில் ஏற்றிச் சென்ற அரிசியை ஹப்புத்தளையில் இறக்கி விட்டு ஹட்டன் நோக்கி பயணித்த லொறி வெலிமடை வீதியில் தங்கமலை பகுதியில் கடந்த வியாளக்கிழமை மாலை (8) வீதியை விட்டு விலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ் விபத்தில் லொறியின் சாரதியும் நடத்துனரும் படு காயத்திற்குட்பட்ட நிலையில் ஹப்புத்தளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
இந்த வீதியானது செங்குத்தாக அதிகமான வளைவுகளை கொண்டுள்ளதால் இந்த பிரதேசத்தில் கனரக வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
No comments