கம்பளை ஸாஹிரா தேசியக்கல்லூரி மாணவர்களுக்கு மூன்று நாள் சென்ட்.ஜோன்ஸ் அம்பியூலென்ஸ் தொண்டர் படையணி பயிற்சி பாசறை
(அஸ்ஹர் இப்றாஹிம்)
மத்திய மாகாணத்தில் பூகழ்பூத்த கம்பளை ஸாஹிரா தேசிய கல்லூரியின் சென்ட். ஜோன்ஸ் அம்பியூலென்ஸ் மாணவர் தொண்டர் படையணியின் மூன்று நாள் வதிவிட பிராந்திய பயிற்சிப் பாசறை அண்மையில் கல்லூரி வளாகத்தில் இடம்பெற்றது.
கல்லூரி மாணவர்களை இணைப் பாடவிதான செயற்பாடுகளில் ஈடுபடுத்துவதன் மூலம் மாணவர்களிடையே மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணருவதுடன், தன்னிச்சையாக முடிவெடுக்க கூடிய திறமையை வளர்த்து தொண்டர்களாக சமூகத்தில் பல பணிகளிலும் ஈடுபடுவதற்கான பயிற்சிகளை பாடசாலைக் காலத்திலே மாணவர்கள் பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பமாகவும் இப் பயிற்சி பாசறை வழி வகுக்குகின்றது.
No comments