திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில் தளபாடங்கள் வழங்கி வைப்பு
(அஸ்ஹர் இப்றாஹிம்)
கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி (தேசிய பாடசாலை)க்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் 2024 ம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத் திட்ட நிதி ஒதுக்கீட்டில், பெறுமதியான தளபாடங்களை மாணவிகளின் கல்வி செயற்பாட்டிற்கு பயன்பெறும் வகையில் அத்தளபாடங்களை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு சேர் ராஸிக் பரீட் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்முனை பிரதேச செயலகத்தின் கல்முனைக்குடி - 14ம் பிரிவுக்கான பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.ஏ. பாத்திமா றிஸ்னா கொள்வனவு செய்யப்பட்ட தளபாடங்களை கல்லூரி முதல்வர் ஏ.பி. நஸ்மியா சனூஸ் அவர்களிடம் கையளித்தார்.
இந்நிகழ்வில் பிரதி அதிபர் ஏ.எச். நதீரா, ஆசிரியர் ஏ.சீ. தஸ்லிம் நிபார், ஆய்வுகூட உதவியாளர் யூ.கே.எம். முஸாஹிர் , அலுவலக உதவியாளர் எம்.எம்.ஜ. முபாறக் ஆகியோர் கலந்து கொண்டனர்.
No comments