Vettri

Breaking News

சுற்றாடல் முன்னோடி பாசறையில் தங்க வர்ண பதக்கம் வென்ற கல்முனை அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய மாணவி நுஹாவிற்கு கல்வி சமூகம் கெளரவம்






(அஸ்ஹர் இப்றாஹிம்)

சுற்றாடல் அமைச்சின் கீழ் மத்திய சுற்றாடல் அதிகார சபையினால்   "சுற்றாடல் முன்னோடிகளுக்கான தேசிய பாசறை - 2024" கொழும்பு, மகரகம தேசிய கல்வி நிறுவகத்தில் கடந்த  03 நாட்களாக நடைபெற்றது. 
இத் தேசியப் பாசறையில்  கல்முனை  அல் மிஸ்பாஹ் மகா வித்தியாலய சுற்றாடல் கழக மாணவியும் தங்க வர்ணப் பதக்க பரீட்சிப்பில் சித்தியடைந்த மாணவிகளுள் ஒருவருமான  பீ.எம்.எப்.நுஹா  கலந்து கொண்டு தங்க வர்ணப் பதக்கத்தினையும் சான்றிதழையும் பெற்று பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளார். 
இம் மாணவியை பாராட்டி கௌரவிக்கும் விசேட காலை ஆராதனைக் கூட்டம்  பாடசாலை அதிபர் எம்.ஐ.அப்துல் ரஸாக்  தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் கலந்து கொண்டனர்

No comments