Vettri

Breaking News

மாமாங்கத்தில் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழா!!







( வி.ரி.சகாதேவராஜா)

கல்முனை மாமாங்க வித்தியாலயத்தில்  சுவாமி விபுலாநந்த அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் நிகழ்வு இன்று (16) வெள்ளிக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.

இந்துசமயகலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்  ய. அநிருத்தனின் வழிகாட்டலின் கீழ் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களமும், சுவாமி விபுலாநந்த ஞாபகார்த்த பணிமன்றமும் இணைந்து  நடாத்திய  அடிகளாரின் துறவற தின நூற்றாண்டு விழாத் தொடர் பாடசாலையின் அதிபர் எஸ்.புவனேஸ்வரன்
தலைமையில் இடம் பெற்றது.

 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்ற ஆலோசகரும் ,,உதவிக் கல்விப் பணிப்பாளருமான  விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா கலந்து சிறப்பித்தார்.

மேலும் கல்முனை வலயக்கல்வி பணிமனையின் இந்துசமய பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகர்  ம.லக்குணம்,   சைவப் புலவர், வளவாளர்  ஜோ.கஜேந்திரா, வளவாளர்  நா.சனாதனன், மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி
பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.
 பாடசாலைகளுக்கான  சுவாமியின்  திருவுருவப்படங்களை  அதிதிகள்    வழங்கினர்.   ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சுவாமிகளின் படங்கள் வழங்கி வைக்கப்பட்டன 


ஏற்பாடுகளை இந்து சமய கலாசார 
அலுவல்கள் திணைக்களத்தின் சார்பில் மாவட்ட இந்து கலாசார உத்தியோகத்தர்  கு. ஜெயராஜி மேற்கொண்டார்.

விழாத் தொடரின் ஏழாவது பாடசாலை நிகழ்வு இதுவாகும்.

No comments