Vettri

Breaking News

நாளை திருக்கோவிலில் மாவட்ட தமிழ் மொழித்தின போட்டி!!




( வி.ரி.சகாதேவராஜா)

அகில இலங்கை தமிழ் மொழித்தின போட்டிக்கான கல்முனைக்கல்வி மாவட்ட நிலைப்பன போட்டி நாளை(15) வியாழக்கிழமை  திருக்கோவில் வலயத்திலுள்ள தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலயத்தில் நடைபெற உள்ளது.

திருக்கோவில் வலயக் கல்விப் பணிப்பாளர் இரா.உதயகுமார் தலைமையில் நடைபெற இருக்கின்ற இந்த நிகழ்வில் சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், அக்கரைப்பற்று வலயக்கல்விப் பணிப்பாளர் ஏ.எம்.றஹ்மத்துள்ளா ஆகியோர் கலந்து கொள்வார்கள் .

காலை 8 மணிக்கு தமிழ் மொழி தின பண்பாட்டு ஊர்வலம் இடம்பெற இருக்கின்றது .அதன் பிறகு ஏனைய நிகழ்வுகள் ஒன்றன் பின் ஒன்றாக இடம்பெறும்.

No comments