சுகாதார நடை முறைகளை பின்பற்றாது செயற்பட்ட வெதுப்பகம் சீல் வைப்பு !!
யாழ்ப்பாணம் (Jaffna) - சங்கானை சுகாதார பிரிவுற்குட்பட்ட பகுதியில் நீண்டகாலமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றாது செயற்பட்டு வந்த வெதுப்பகம் ஒன்று சீல் வைக்கப்பட்டுள்ளது.
சங்கானை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த சில நாட்களாக உணவு உற்பத்தி மற்றும் விற்பனை நிலையங்களைப் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த வாரம் சுழிபுரம் பிரிவு பொது சுகாதார பரிசோதகர் தலமையில் பொது சுகாதார பரிசோதகர்களால் ஏற்கனவே வழங்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பான அறிவுறுத்தல்களை செய்யாத உணவுகையாளும் நிலையங்களை இனங்கண்டு பரிசோதனை நடவடிக்கையினை மேற்கொண்டனர்.
இதன்போது நீண்டகாலமாக சுகாதார நடை முறைகளை பின்பற்றாத வெதுப்பகம் ஒன்று சிக்கிக்கொண்டது.
மேற்படி வெதுப்பக உரிமையாளருக்கு எதிராக சுழிபுரம் பொது சுகாதார பரிசோதகரினால் இன்றையதினம் 29.08.2024 மல்லாகம் நீதிமன்றில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டது.
இன்றையதினமே வழக்குகளை விசாரணைக்கு எடுத்து கொண்ட நீதிமன்றம், வெதுப்பக உரிமையாளருக்கு மொத்தமாக 24000/= தண்டம் விதித்ததுடன் வெதுப்பகத்தை குறைபாடுகள் நிவர்த்தி செய்யும் வரை சீல் வைத்து மூடுமாறு உத்தரவிட்டுள்ளது.
No comments