நாளை சமுத்திர தீர்த்தோற்சவம் - பாதுகாப்பு ஏற்பாபாடுகள் தொடர்பான கூட்டம்!!
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திர வேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை
ஞாயிற்றுக்கிழமை 04ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறவிருக்கிறது.
அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி தொண்டர் படை உறுப்பினர்களுக்கான அறிவித்தல் கலந்துரையாடல் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலய தலைவரின் வேண்டுதலுக்கு அமைய பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நேற்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதான கருப்பொருளாக பொதுமக்களுக்கான பாதுகாப்பினை அதாவது அவர்களது உடைமைகளை களவு போகாமல் அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி பேசப்பட்டது.அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் அனைவரின் பாதுகாப்பும் வழங்கப்படும் என திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பத்மகுமார தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் திருக்கோவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.பத்மகுமார ,சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.ஜெகசுதன் ,சமுர்த்தி தலைமை பீட முகாமையாளர் எம்.அரசரெட்னம் கிராம நிர்வாக உத்தியோகத்தர் ஏ.கந்தசாமி மற்றும் ஆலய வண்ணக்கர் வ.ஜெயந்தன் செயலாளர் ஏ.செல்வராசா தொண்டர் படை உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை மற்றுமொரு பாதுகாப்பு கூட்டம் இன்று சனிக்கிழமை திருக்கோவில் பொலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
நாளைய (04) தீர்த்த உற்சவத்திற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையின் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தெரிவித்தார் .
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில் ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் தலைமையில் தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.
பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதற்காக முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தீர்த்தம் அன்று பிதிர்க்கடன் செலுத்துகின்றவர்களுக்கு வசதியாக சிவாச்சாரியார்களை உள்ளடக்கி பிதிர்க்கடன் நிறைவேற்றுகின்ற வேலை முன்னெடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்தார்.
No comments