தபால் மூல வாக்களிப்பு குறித்த புதிய அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குகளை செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
செப்டம்பர் 4 ஆம் திகதி மாவட்டச் செயலர்கள் அலுவலகங்கள் மற்றும் தேர்தல் ஆணைக்குழு அலுவலகங்களில் தபால் வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
செப்டெம்பர் மாதம் 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதேவேளை, தபால் வாக்குகளை உரிய நாட்களில் வழங்க முடியாதவர்கள், செப்டம்பர் 11 மற்றும் 12 ஆம் திகதிகளில், தங்களின் பணியிடம் அமைந்துள்ள மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தபால் மூல வாக்குகளை வழங்க முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
தபால் மூல வாக்குகளை வழங்க தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம், செல்லுபடியாகும் கடவுச்சீட்டு அல்லது தேர்தல் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட தற்காலிக அடையாள அட்டை பயன்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இருப்பினும், அலுவலக அதிகாரப்பூர்வ அடையாள அட்டையைப் பயன்படுத்தி யாராவது தபால் மூல வாக்கை வழங்க முன் வந்தால், தேர்தல் அதிகாரியால் நியமிக்கப்பட்ட அதிகாரி ஒருவர் வாக்காளரின் அடையாளத்தை சரிபார்ப்பார் என்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதேவேளை, தேர்தல் கடமைகளுக்காக சுமார் 54,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தேர்தல்கள் தொடர்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சங்க கரவிட்ட தெரிவித்தார்.
No comments