பா. அரியநேந்திரனின் 'நமக்காக நாம்' தேர்தல் பிரச்சாரம்!
தமிழ்த்தேசிய கட்டமைப்பின் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரனின் நமக்காக நாம் என்ற தொனிப்பொருளில் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தமிழ் பொது வேட்பாளரின் தேர்தல் பிரச்சாரம் இன்று (29) மூன்றாவது நாளாக கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்டது.
கிளிநொச்சி நகரிலிருந்து வட்டக்கச்சி பிரதேசம் ஊடாக தர்மபுரம், விசுவமடு பகுதிகளில் வட்டக்கச்சி பொதுச்சந்தை முன்பாகவும் தனது தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்திருந்தார். இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.
அவர் கருத்து தெரிவிக்கையில்,
சிலருக்கு தமிழ் பொதுவேட்பாளர் விடயம் காய்ச்சல் பிடித்திருக்கிறது. சில வேட்பாளர் விலக வேண்டும் என்று சொல்கின்றனர். அவர் வெல்வதும் இல்லை வாக்கை சிறகடிக்க போகின்றார்.
இவரை தோற்கடிக்க வேண்டும் என்று சொல்கின்றனர்.என்னை தோற்கடிப்பது என்பது இனத்தை தோற்கடிப்பதற்கு சமன் நான் ஜனாதிபதியாகப்போறதும் இல்லை ஒரு இனத்தின் விடுதலைக்காக போராடி தோல்வியடைந்ததின் நிலைப்பாடு என தெரிவித்தார்.
No comments