ஸ்ரீமன் நாராயணன் ஆலய சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை!!
( வி.ரி.சகாதேவராஜா)
காரைதீவு ஸ்ரீமன் நாராயணன் ஆலய அலங்கார உற்சவத்தின்
சமுத்திர தீர்த்தோற்சவம் நாளை (19) திங்கட்கிழமை நடைபெறவிருக்கிறது.
ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ மகேஸ்வரக் குருக்கள் அதற்கான கிரியைகளை நடாத்தி வருகின்றார்.
ஆலய பரிபாலன சபை தலைவர் ம.ஜெகநாதன் தலைமையில் அலங்கார உற்சவம் நடைபெற்று வருகிறது.
கடந்த காலங்களைவிட சிறப்பாக பாற்குடபவனி வேட்டைத் திருவிழா வரலெட்சுமி விரதம் தினத் திருவிழா சப்புற ஊர்வலம் என்பன நடைபெற்று வந்தன.
நாளை திங்கட்கிழமை சமுத்திர தீர்த்தோற்சவம் வைரவர் பூஜையுடன் இவ்வருட மகோற்சவம் நிறைவடையும்.
No comments