Vettri

Breaking News

வடமேல் மாகாண பாடசாலைகளுக்கீடையிலான எறிபந்து போட்டிகளில் கிராமப்புற பாடசாலைகள் பிரகாசிப்பு




 

(அஸ்ஹர் இப்றாஹிம்)

இலங்கை பாடசாலைகள் எறிபந்து சம்மேளனம் ஒழுங்கு செய்திருந்த வடமேல் மாகாண பாடசாலைக்கிடையிலான எறி பந்து போட்டிகளில் பல பாடசாலை மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். 

ஆண்களுக்கான எறிபந்து போட்டியில் அம்பன்பொல விஷ்வ தீபன் தேசிய பாடசாலை சம்பியனாகவும்,கிரியுல்ல விக்ரமசீலா தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தையும், 

பெண்களுக்கான எறிபந்து போட்டியில் போகமுவ மத்திய மகா வித்தியாலயம் சம்பியன்களாகவும், அம்பன்பொல விஷ்வ தீபன் தேசிய பாடசாலை இரண்டாம் இடத்தையும் பெற்று தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளன.




No comments