Vettri

Breaking News

இதுவரை யாரும் கட்டுப்பணம் செலுத்தவில்லை!!




 2024ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பில் எல்பிட்டிய உள்ளூராட்சி சபைக்கான கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்வது தொடர்பான அறிவிப்பை தேர்தல்கள் ஆணைக்குழு அண்மையில் வெளியிட்டிருந்தது.

கட்டுப்பணத்தை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை கடந்த 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட போதிலும், நேற்று (30) வரை எந்தவொரு குழுவும் அல்லது தரப்பினரும் கட்டுப்பணத்தை வைப்பிலிடவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

செப்டம்பர் மாதம் 11 ஆம் திகதி மதியம் 12.00 மணி வரை கட்டுப்பணம் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எல்பிட்டிய உள்ளூராட்சி சபையின் தேர்தல் அதிகாரியினால் கடந்த 26 ஆம் திகதி தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக  அறிவிக்கப்பட்டது.


No comments