சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலயத்தில் மாணவர்கள் கெளரவிப்பு !!!
செ.துஜி
கல்முனை வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலயத்தில் 2023 இல் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு வித்தியாலய அதிபர் பி.கமலநாதன் தலைமையில் நடைபெற்றது.
உதவும் பொற்கரங்கள் அமைப்பின் ஸ்தாபகர் கனடாவில் வசிக்கும் விசு கணபதிப்பிள்ளை நிதி அனுசரணையில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் கோட்டக் கல்விப் பணிப்பாளர் ஏ.சஞ்ஜீவன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சேனைக்குடியிருப்பு கணேஷ மகா வித்தியாலயத்தில் வரலாற்றில் முதல் தடவையாக கலைப்பிரிவில் 12 மாணவர்கள் இம் முறை பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இம் மாணவர்கள் பேண்ட் வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு அதிதிகள், பாடசாலை சமூகத்தினர், பொதுமக்களினால் கெளரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
No comments