மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண் தற்கொலை!
மீற்றர் வட்டிக்கு கடன் பெற்ற இளம் குடும்பப் பெண்ணொருவர் கடனை மீளச் செலுத்த முடியாத நிலையில் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.
யாழ்ப்பாணம் - ஆறுகால்மடம் பகுதியைச் சேர்ந்த சயந்தன் கேதீசா (வயது 28) என்ற 2 பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த பெண் மீற்றர் வட்டிக்கு கடன் பெற்று கடை ஆரம்பித்துள்ளார். இருப்பினும் வியாபாரம் இல்லாத நிலையில் கடையினை மூட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்நிலையில் வாங்கிய கடனை அடைக்க முடியாமையினால், கடன் வழங்குனர்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.
இந்நிலையில், இன்றையதினம் தவறான முடிவெடுத்து தூக்கிட்டு உயிர்மாய்த்துள்ளளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
No comments