Vettri

Breaking News

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச சந்தைக்கு எரிபொருள் விநியோகம்!!




 தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கீழ் திருகோணமலையில் (Trincomalee) 99 எண்ணெய் தாங்கிகளைப் பயன்படுத்தி எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் ஆரம்பிக்கப்படும் என அக்கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்க (Anura Kumara Dissanayaka) தெரிவித்துள்ளார்.


இதேவேளை சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்படும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

ஜனாதிபதி தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டார்

இங்கு தொடர்ந்தும் கருத்து  தெரிவித்த அவர், “திருகோணமலையில் 99 எண்ணெய் தாங்கிகள் உள்ளன. ஒரு தொட்டியில் 10,000 மெட்ரிக் தொன் சேமிக்க முடியும்.

தோராயமாக பத்து இலட்சம் மெட்ரிக் தொன் சேமிக்க முடியும். நமக்கு அதிகம் எண்ணெய் கிடைக்கும். எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தைத் தொடங்கி, எண்ணெயைச் சுத்திகரித்து, சேமித்து, அருகிலுள்ள துறைமுகத்திலிருந்து சந்தைக்கு அனுப்பலாம்.

அந்தப் பணியைச் செய்யக்கூடிய சர்வதேச நிறுவனமும், எண்ணெய்க் கூட்டுத்தாபனமும் ஒன்றிணைந்து திருகோணமலையில் உள்ள எண்ணெய் தாங்கி வளாகத்தை புத்துயிர் அளிக்கும்.” என தெரிவித்தார்.

No comments