Vettri

Breaking News

முட்டை உற்பத்திக்கான கொள்கை திட்டம் உருவாக்குவோம் - சஜித் பிரேமதாச!!




 நுகர்வோரையும் மற்றும் உற்பத்தியாளரையும் பாதுகாக்கின்ற வகையில் முட்டை உற்பத்திக்கான கொள்கை திட்டம் ஒன்றை உருவாக்குவோமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) தெரிவித்துள்ளார்.

ஹெட்டிபொல (Hettipola) படுவஸ்நுவர (Baduvasnuvara) பிரதேச முட்டை உற்பத்தியாளர்களைச் சந்தித்து அவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து இன்றைய (30) தினம் கலந்துரையாயுள்ளார்.


இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “ இந்த தேசியக் கொள்கை திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது நுகர்வோர், உற்பத்தியாளர் அரச மற்றும் தனியார் துறை என அனைத்து பிரிவினரையும் வெற்றி பெறச் செய்யும் விதத்திலான தேசிய கொள்கை திட்டம் ஒன்றிற்கு நாம் செல்ல வேண்டும்.

தமது வறுமையை போக்கும் வேலைத்திட்டத்தில் நுகர்வு, உற்பத்தி, சேமிப்பு, ஏற்றுமதி மற்றும் முதலீடு ஆகிய ஐந்து திட்டங்களின் ஊடாக 24 மாதங்களுக்கு 20 ஆயிரம் ரூபா வீதம் வறுமையான குடும்பங்களுக்கு வழங்குவோம்.

வறுமையைப் போக்கும் வேலைத்திட்டத்தின் ஒரு அங்கமாக முட்டை உற்பத்தி பயனுள்ளதாக அமையும்.

ஏற்றுமதியின் போது போட்டித் தன்மை காணப்பட வேண்டும் என்பதோடு உற்பத்திக்கான செலவை குறைப்பதும் முக்கியமானதாகும்.

அரச மற்றும் தனியார் துறையினரை ஒன்றாக இணைத்து குழு ஒன்றை அமைத்து ஒவ்வொரு துறைக்கும் தனித்தனி துறைகள் நிறுவப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments