இன்று சிறப்பாக நடைபெற்ற திருக்கோவில் ஆடி அமாவாசை சமுத்திர தீர்த்தோற்சவம்!
(வி.ரி. சகாதேவராஜா)
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற திருக்கோவில் ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தின் வருடாந்த ஆடி அமாவாசை உற்சவ சமுத்திர தீர்த்தோற்சவம் இன்று (4) ஞாயிற்றுக்கிழமை வியாழக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ சண்முகமகேஸ்வரக்குருக்கள் முன்னிலையில்,
ஆலயகுரு சிவஸ்ரீ அங்குசநாதக்குருக்கள் ஒத்துழைப்பில் தீர்த்தோற்சவம் 11 மணியளவில் ஆலயத்திற்கு முன்பாக உள்ள சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.
ஆலய பரிபாலன சபை தலைவர் சுந்தரலிங்கம் சுரேஷ் தலைமையிலான பரிபாலன சபையினர், மற்றும் ஆயிரக்கணக்கான கந்தன் அடியார்கள் கலந்து கொண்டனர்.
விசேட பிரமுகர்களாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி மூ. கோபாலரெத்தினம்,திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் காரைதீவு முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா மற்றும் புலம்பெயர் சுந்தரலிங்கம் யாமினி( லண்டன்), கணபதிப்பிள்ளை நடராஜா ( லண்டன்),சுந்தரலிங்கம் நகுலன் (துபாய்), உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தார்கள்.
இந்த உற்சவம் கடந்த மாதம் 18 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 18நாட்கள் பகல் இரவுத் திருவிழாக்கள் உள்வீதி வெளிவீதி உலா சகிதம் சிறப்பாக நடைபெற்று வந்தன.
இற்றைக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களால் சிறிய கோயிலாக அமைக்கப்பட்டு பின்பு இராஜராஜ சோழர் காலத்தில் கற்கோயில் அமைக்க பெற்று நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு ஆடி அமாவாசை உற்சவமும் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தினமும் பகலில் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டுவந்தது.
பிதிர்க்கடன் செலுத்துகின்ற ஆடி அமாவாசை உற்சவம் என்பதால் இம்முறை பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டார்கள் அமுது படைத்தார்கள் .
No comments