Vettri

Breaking News

சம்மாந்துறையில் பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வுச் செயலமர்வு!!!




(வி.ரி.சகாதேவராஜா)

கிழக்கு மாகாண கல்வித் திணைக் களத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை வலயக்கல்விப்  பணிமனையின் முறைசாரா கல்விப் பிரிவு ஏற்பாடு செய்த பெற்றோருக்கான கல்வி விழிப்புணர்வுச் செயலமர்வு நேற்றுமுன்தினம் (13) செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.




 சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர் செபமாலை மகேந்திரகுமாரின் வழிகாட்டலில் வலயக்கல்விப்பணிமனையின் முறைசாரா கல்வி பிரிவின் ஆசிரியர் ஆலோசகர் எம் .ஐ.அகமட்லெவ்வையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த செயலமர்வில் வளவாளராக உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா கலந்து கொண்டார்.

 சம்மாந்துறை அல்.ஹம்றா முஸ்லிம் வித்தியாலயத்தில் கருத்தரங்கு நடைபெற்றது.
54 பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

 இதன்போது சிறுவர் உரிமை மற்றும் கடமைகள் மற்றும் பெற்றோர் கடமைகள் தொடர்பாக பூரண விளக்கம் அளிக்கப்பட்டது.

No comments