Vettri

Breaking News

வாக்காளர் ஒருவருக்கு ஆயிரம் ரூபாய் வரை கோரியுள்ள பிரதான வேட்பாளர்கள்!




 ஜனாதிபதித் தேர்தலில் வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய அதிகபட்ச தொகை ஆயிரம் ரூபா வரை வழங்கப்பட வேண்டுமென பிரதான வேட்பாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான முன்மொழிவுகள் குறித்த இறுதித் தீர்மானம் எதிர்காலத்தில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

தேர்தல் செலவு ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி, வேட்புமனுக்கள் பெறப்பட்ட 5 நாட்களுக்குள் ஒரு வாக்காளருக்குச் செலவிடப்படும் அங்கீகரிக்கப்பட்ட தொகை வர்த்தமானியில் வெளியிடப்பட வேண்டும்.

அது குறித்து முடிவெடுப்பதற்காக வேட்பாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று (16) தேர்தல்கள் ஆணைக்குழு வளாகத்தில் கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் செலவிட்ட தொகை தொடர்பான அறிக்கையை ஜனாதிபதித் தேர்தல் முடிவடைந்த 20 நாட்களுக்குள் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் வழங்குப்பட வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், இலத்திரனியல் ஊடகங்கள் ஊடாக ஒரு வேட்பாளருக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நிறுவனத்திற்கு அறிவித்தல் விடுத்துள்ளது.

தேர்தல் காலத்தில் பல்வேறு நன்கொடைகள் செய்து வாக்களிக்க முயற்சிப்பதன் மூலம் வாக்காளர் அவமானப்படுத்தப்படுவதாக பெஃப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.


No comments