Vettri

Breaking News

மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம்!!!




செ.துஜி

கிழக்கில் வரலாற்று பிரசித்தி பெற்ற முறையே மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகியவற்றைக் கொண்ட  மகிமை மிக்க மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த 26 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து பத்து நாட்கள் நடைபெறும் இவ் ஆலய உற்சவத்தில் எதிர்வரும் 03 ஆம் திகதி சனிக்கிழமை ஆலயத்தின் சித்திர தேர் உற்சவமும் , 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளது.

தீராத நோய் எல்லாம் தீர்த்து வைக்கும் அற்புத தீர்த்தமாக மாமாங்கேஸ்வரர் ஆலய தீர்த்தம் அமைந்துள்ளது. 

வழமையை விட இம் முறை அதிகளவிலான பக்தர்கள் வருகை தரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களின் நலன் கருதி ஆலயத்திற்கான விசேட போக்குவரத்து ஒழுங்குகளும், பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்தனர்

No comments