தேர்தலுக்கான வாக்குச் சீட்டு 8இல் விநியோகம்!!
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் விசேட தினமாக செப்டம்பர் 8 ஆம் திகதியை (ஞாயிற்றுக்கிழமை) தபால் திணைக்களம் அறிவித்துள்ளது.
செப்டெம்பர் 8ஆம் திகதி அரசாங்க விடுமுறை நாளாக இருந்தாலும் உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரதி தபால் மா அதிபர் (பதில்) டி.ஏ.ராஜித கே.ரணசிங்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.
உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டுகளைப் பெறுவதற்காக அறிவிக்கப்பட்ட திகதியில் மக்கள் தங்கள் வீடுகளில் இருப்பார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.
அதன்படி, வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க செப்டம்பர் 14-ஆம் திகதி இறுதி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இறுதி திகதியை தேர்தல் ஆணைக்குழு அறிவித்தது. அதன்படி, செப்டம்பர் 14ஆம் திகதிக்குப் பின், அதிகாரப்பூர்வ தேர்தல் அட்டைகளை வீடு வீடாக விநியோகம் செய்வது நிறுத்தப்படும்.
ஆனால் மக்கள் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்திய பிறகு அலுவலக நேரத்தில் அருகிலுள்ள தபால் நிலையத்திலிருந்து தேர்தல் நாள் வரை தங்கள் வாக்கு அட்டைகளைப் பெறலாம்
No comments